(Maruthuva kurippu in tamil : Moringa health benefits)
முருங்கை மருத்துவ பயன்கள்
மருத்துவ குறிப்பு
- முருங்கை கீரையில் வைட்டமின் பி மற்றும் சி மேலும் புரத சத்துக்களும் இரும்பு சத்துக்களும் உள்ளது.
- முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை எடுத்து அதை நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் கை மற்றும் கால்களில் ஏற்படும் அசதிகள் நீங்கும்.
Maruthuva kurippu in tamil : Moringa health benefits |
- முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து அதை வயிற்றின் மேல் கனமாக பூசி வர நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும்.
- முருங்கை பூவுடன் சம அளவு துவரம் பருப்பு சேர்த்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல் , வாய் கசப்பு மற்றும் வாய் நீர் ஊறல் குறையும்.
Maruthuva kurippu in tamil : Moringa health benefits |
- முருங்கை கீரையை உணவுடன் அதிக வேக விடாத பொரியலாக சமைத்து அதை உண்டு வர தீராத கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
- முருங்கை கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நீரழிவு நோய் குணமாகும்.
- முருங்கை காய் வியர்வையை பெருக்கும். காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றை போக்கும்.
Maruthuva kurippu in tamil : Moringa health benefits |
- முருங்கை பூவை சிறிதளவு எடுத்து அதை கால் மில்லி லிட்டர் பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.
- இவை அனைத்தும் முருங்கை உடைய மருத்துவ குறிப்புகள் ஆகும்.
Moringa health benefits: Maruthuva kurippu in tamil
முருங்கையின் பயன்களை பற்றிய வீடியோ பதிவு
இந்த வீடியோ பதிவிலும் தாங்கள்மேலும் பல பயன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அகத்திக் கீரை : (Maruthuva kurippu in tamil)
>> அகத்திக் கீரையை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து வர ரத்தாகி கொதிப்பு மற்றும் வாய்ப்புண் வராது.
>>அகத்திக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்க கொள்வதன் மூலம் பித்தக் கோளாறுகள் தீரும். குடற் புழுக்கள் வெளியாகும்.
>>பல மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகதிக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
தண்டு கீரை: (Maruthuva kurippu in tamil)
>>தண்டுக்கீரையில் இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தும் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். மூலநோய் உள்ளவர்கள்
>>இந்தக் கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் கட்டுப்படும். எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல், நீர்க்கடுப்பு, உள்ளவர்கள் இந்த கீரையை உட்கொண்டு நிவாரணம் பெறலாம்.
>>குடல் புண் போக பயன்படுகிறது. சிவப்பு நிற தண்டுக்கீரை மிகவும் சிறந்தது. இது கருப்பை கோளாறுகளையும் போக்க வல்லது.
ஆரோக்கிய வாழ்விற்கு சில வழிகள் : (Maruthuva kurippu in tamil)
- காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்
- உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பேண வேண்டும்
- கீரையும் தயிரும் இரவில் வேண்டாம்
- காலை 2 கிலோ மீட்டர் நடப்பது நல்லது
- மரங்களின் அடியில் இரவு நேரங்களில் உறங்க வேண்டாம்
- பகலில் தூக்கம் தவிர்த்தல் நல்லது
- குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதே சிறந்தது
- நாய், பூனைகளை கொஞ்சுவது கேடு
- எண்ணெய் குளியல் எழில் சேர்த்திடும்
- தினமும் எட்டு மணி நேரத்திற்கு அதிகமா தூங்காதே
- மரங்களை இரவில் மறந்தும் முகர கூடாது
- உண்டவுடன் உறக்கம் கொள்ள வேண்டாம்
- உள்ளாடைகளை மிகவும் இறுக்கமாக அணியாக கூடாது
- கொழுப்பு உணவுகளை குறைத்தல் நல்லது
- வெளிச்சமும். காற்றும் வீட்டினுள் வர வேண்டும்
- வட திசை தலை வைத்து தூக்கம் கொள்ள கூடாது
- கொழுப்பு உணவுகளை குறைத்தல் நல்லது
- கசப்பு உணவில் கட்டாயம் சேர்த்து உண்ண வேண்டும்
- தினம்தோறும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திரிக்க வேண்டும்
- கடவுள் வழிபாடு உள்ளத்தில் அமைதியை தரும்
- வாரம் இருமுறை அல்லது சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து ஊறவிட்டு நீராட வேண்டும்.
Also see more tips: